For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்திற்கு 1 லட்சம் 'ரயில் நீர்' பாட்டில்களை அனுப்பி வைத்த இந்திய ரயில்வே

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்திய ரயில்வே 1 லட்சம் ரயில் நீர் தண்ணீர் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளது.

நேபாளத்தில் சனிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1, 896 பேர் பலியாகியுள்ளனர், 4, 271 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நேபாளத்தில் ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

India Sends 'Rail Neer' Water to Quake-Hit Nepal

நேபாளத்தில் மீ்ட்பு பணிகளில் உதவி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை குழு அங்கு சென்றுள்ளது. இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நேபாளத்திற்கு மருத்துவர்கள், மருந்துகள், போர்வைகள் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு அளிக்கும் ரயில் நீர் தண்ணீர் பாட்டில்களை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு விமானப்படை விமானம் மூலம் நேற்று அனுப்பி வைத்துள்ளது. நேற்று ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில்,

நேபாளத்திற்கு மேலும் ஒரு லட்சம் பாட்டில் ரயில் நீரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
The Indian Railways, which produces its own packaged drinking water to serve its passengers, dispatched some 100,000 bottles of 'Rail Neer' to quake-hit Nepal on Saturday night through a special Indian Air Force aircraft that also carried other relief operations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X