“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!
சென்னை: "வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது. அதனால் முதலமைச்சர் விஜய் சார்!
PR பில்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும்,
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க." என அதிமுக ஐ.டி. விங் காட்டமாக விமர்சித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், ஆங்காங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகின்றன. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக, விஜய் அரசை, பொய்க்கால் குதிரை அரசு எனக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக ஐ.டி. விங் சார்பில் வெளியிடப்படுள்ள சமூக வலைதள பதிவில், "மதுராந்தகம் அருகே 75 வயது மூதாட்டி கழுத்தில் இருந்த நகையை பறித்து - கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி.
வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுப்பு.
ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.
நெல்லை - தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்.
பொய்க்கால் குதிரை அரசே!
இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா?

மாற்றம், புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா?
குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை! ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம Silent mode-ல வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு!
வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது.
அதுனால முதலமைச்சர் விஜய் சார்!
PR பில்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும்,
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications