இந்தியாவின் கைக்கு வரும் "சுதர்சன சக்கரம்"..எஸ்-400ஐ இறக்கும் ராணுவம்! இனி பாகிஸ்தானுக்கு தான் பகீர்
டெல்லி: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான ராணுவ ஒத்துழைப்பில் மேலும் ஒரு முக்கியமான கட்டம் தொடங்கவுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் கூடுதல் S-400 வான் தடுப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்கும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு, இந்தியா தனது வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரஷ்யாவுடன் 5 S-400 ஏவுகணை தொகுப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இவற்றில் மூன்று தொகுப்புகள் ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக மீதமுள்ள இரண்டு தொகுப்புகளின் விநியோகம் தாமதமாகியுள்ளது. இந்த S-400 வான் தடுப்பு அமைப்பு, தரையிலிருந்து வானில் வரும் எதிரி விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை 400 கிலோமீட்டர் தொலைவிலிருந்தே சுட்டு வீழ்த்தக்கூடிய திறனுடையது.

இந்தியா ரஷ்யா
ரஷ்யா தயாரிப்பான 5 S-400 ஏவுகணை தொகுப்பு இந்திய ராணுவத்தில் "சுதர்சன சக்கரம்" என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட எல்லை பதற்றத்தின் போது, இந்தியா பயன்படுத்திய S-400 அமைப்பு பல எதிரி விமானங்களை வெற்றிகரமாகத் தடுக்க உதவியது. குறிப்பாக, பாகிஸ்தானின் 5 முதல் 6 போர் விமானங்களும், ஒரு உளவு விமானமும் 300 கி.மீ. தொலைவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் இந்தியா தனது வான் பாதுகாப்பில் மிகுந்த வலிமை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எஸ்400 ஏவுகணை
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் வான் தடுப்பு திறனை மேலும் மேம்படுத்துவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் கூடுதல் S-400 அமைப்புகளை வாங்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ரஷ்யாவுடன் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாஸ்கோ பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, ரஷ்யாவிடம் இருந்து மீதமுள்ள இரண்டு S-400 தொகுப்புகளை விரைவில் இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியதாகவும், மேலும், புதிய S-400 ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்பட்டது.
ராணுவ ஒத்துழைப்பு
அதே நேரத்தில், இந்தியா S-400க்கு அடுத்த தலைமுறை பாதுகாப்பு அமைப்பான S-500 ஏவுகணை அமைப்பை வாங்கும் வாய்ப்பையும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் அடுத்த தலைமுறை வடிவமைப்பில் பணிபுரிந்து வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியா கடந்த மாதங்களில் பல உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை
குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துல்லியமான ராணுவ நடவடிக்கை நடத்தியது. இத்தகைய சூழலில், கூடுதல் S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவது, இந்தியாவின் பாதுகாப்புத் திறனை பல மடங்கு வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முடிவாக பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications