For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏ.. ஏ.. என்ன நடக்குது? அதிர்ச்சியாக பார்த்த ரோஹித்! அப்படியே ஸ்டன் ஆன தினேஷ் கார்த்திக்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

கவுகாத்தி: நேற்று தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய இரண்டாவது டி 20 ஆட்டத்தில் மைதானத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி 20 ஆட்டம் நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றது.

எப்போதும் தூங்கி எழுந்தது போல சோகமாக ஆடும் "சாக்லேட் பாய்" கே.எல் ராகுல் கூட.. நேற்று "ரக்கெட் பாய்" ராகுலாக மாறி 203 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். 28 பந்துகளில் இவர் அதிரடியாக ஆடி 57 ரன்களை குவித்தார்.

இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா கொஞ்சம் நிதானமாக ஆடினார். 110 ஸ்டிரைக் ரேட்டில்தான் இவர் ஆடினார். 37 பந்துகளை பிடித்த அவர் 43 ரன்களை எடுத்தார்.

டான் பிராட்மேனுக்கு டஃப் கொடுக்கும் இளம் வீரர்..இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம்.. சர்ஃபராஸ் கான்! டான் பிராட்மேனுக்கு டஃப் கொடுக்கும் இளம் வீரர்..இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம்.. சர்ஃபராஸ் கான்!

கோலி சூர்ய குமார்

கோலி சூர்ய குமார்

அதன்பின் இறங்கிய கோலி, சூர்ய குமார் யாதவ் ஜோடிதான் மொத்தமாக தென்னாபிரிக்க அணியை துவம்சம் செய்தது. தொடக்கத்தில் இருந்தே இந்த ஜோடி அதிரடி காட்டியது. முதலில் கோலி கூட சில பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினார். ஆனால் அதன்பின் அவரும் வேகம் எடுத்தார். இன்னொரு பக்கம் சூர்ய குமார் யாதவோ "இது நான் யாருன்னு நிரூபிக்க வேண்டிய நேரம்" சர்பேட்டா கபிலன் சொல்வது போல அதிரடியாக ஆடினார். இதோடு வரிசையாக அவர் டி 20 போட்டிகளில் ஹாட் டிரிக் அரை சதம் அடித்துள்ளார்.

சதம்

சதம்

நேற்று மட்டும் சூர்யா குமார் யாதவ் 277 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். வெறும் 22 பந்துகள் பிடித்த அவர் 61 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அவரின் விக்கெட்டை எடுக்க முடியாத நிலையில் ரன்னிங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். சூர்ய குமார் யாதவ் நேற்று மட்டும் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் அடித்து அசத்தினார். இன்னொரு பக்கம் கோலியும் 28 பந்துகளில் 7 பவுண்டரி அடித்து 49 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக்கும் 2 சிக்ஸ் உட்பட 17 ரன்கள் எடுத்தார்.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவருக்கு 237-3 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய மில்லர் சதம் காரணமாக 221-3 ரன்கள் வரை எடுத்து தோல்வி அடைந்தது. நேற்று மில்லர் மட்டும் 106 ரன்கள் எடுத்தார். டி காக் 69 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாவது ஓவரை அர்ஷிதீப் சிங் வீசினார். அப்போது ரைலி ரொசோவ் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

மிட் ஆப் திசையில் தினேஷ் கார்த்திக் பீல்டிங் செய்து கொண்டு இருந்தார். தினேஷ் கார்த்திக் கீப்பர் என்றாலும் பண்ட் கீப்பிங் செய்வதால், இவர் பீல்டிங் நின்றார். ஆனால் இவருக்கு பீல்டிங் செய்து பெரிதாக அனுபவம் இல்லை. இந்த நிலையில் ரைலி சரியாக அவரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் இந்த பந்தை தினேஷ் கார்த்திக் கையில் வாங்கிய அடுத்த நொடி பந்து அப்படியே ஜம்ப் ஆனது. இதை பார்த்ததும் ரோஹித் சர்மா அப்படியே அதிர்ந்து போனார்.

கத்தினார்

கத்தினார்

ஏ..ஏ.. என்பது போல ரோஹித் சர்மா சத்தம் போட்டார். இன்னொரு பக்கம் தினேஷ் கார்த்திக் பந்து கையை விட்டு போன பின்பும் அதை தட்டி விட்டு ஜக்கிள் செய்வது போல செய்தார். இரண்டு முறை மிஸ் செய்து, மூன்றாவது முறை வெற்றிகரமாக அந்த பந்தை பிடித்தார். அவர் இந்த கேட்சை பிடித்த பின்புதான் ரோஹித் சர்மா ஆசுவாசம் அடைந்தார். இது அனைத்தையும் அர்ஷ்தீப் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு கடைசியில், கேட்ச் பிடித்ததும் உற்சாகத்தில் கத்தினார். தினேஷ் கார்த்திக் ஒரு நொடி ஸ்டன் ஆகி.. நாமதான் கேட்ச் பிடித்தோமா என்பது போல் சிரித்தபடி வந்தார்.

English summary
India vs SA: What happened during Dinesh Karthick's catch against South Africa player Rilee?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X