சட்டென சரிந்த போர் விமானம்.. பைலட் பரிதாபமாக உயிரிழப்பு! என்ன நடந்தது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தை இயக்கிய பைலட்கள் இருவருமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜாகுவார் பயிற்சி விமானத்தை இயக்கிய போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ராஜஸ்தானின் சுரு என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது விமானம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

இதில் விமானத்தை இயக்கிய பைலட்கள் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் ஜாகுவார் பயிற்சி விமானத்தை இயக்கிய போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பானுடா கிராமத்தில் மதியம் 12.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருந்து வெறும் 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இருவரும் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், இதனால் உயிரிழந்தனர். அவர்கள் தாழ்வான தூரத்தில் விமானத்தை இயக்கிய போது விபத்து நிகழ்ந்ததாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்தோரின் பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தால் வேறு யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ராணுவம் உறுதி செய்துள்ளது.
வானில் பயங்கரச் சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வயல்வெளிகளில் இருந்து தீயும், புகையும் எழுந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விபத்தில் சிக்கிய விமானத்தின் அருகேயே விமானியின் உடல் மீட்கப்பட்டது. ராணுவம் உடலை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது.
விபத்து குறித்த செய்தி பரவியதும், ரத்தன்கர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கிராம மக்கள் விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை ராணுவம் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications