பாகிஸ்தான் ராணுவ ஆக்ஷன் குழுவினரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.. எல்லையில் பெரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கெரான் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின், 'எல்லை ஆக்ஷன் குழு' (பிஏடி) ஊடுருவல் முயற்சி பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டது. ஐந்து முதல் ஏழு பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்திய ராணுவத்தால், பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட படங்களில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பக்கத்தில் ஊடுருவல்காரர்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால், அந்த உடல்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.

Indian Army has foiled an infiltration attempt by a Pakistani BAT

பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை ஆக்ஷன் குழு என்பது, இந்திய எல்லையில், அத்துமீறி தாக்குதல் நடத்த உருவாக்கி வழிநடத்தப்படும் ஒரு குழுவாகும்.

"தீவிரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் உடந்தையாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் உள்நாட்டில் அனைத்து தீவிரவாத செயல்களுக்கும் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுக்கும்" என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 36 மணி நேரத்தில் காஷ்மீரில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் ராணுவம் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றும் இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், ஷோபியன் மற்றும் சோபூர் பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டரில் நான்கு ஜெய்ஷ்-இ-முஹம்மது தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

பூஞ்ச் ​​மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போர் நிறுத்தத்தை மீறி மோட்டார் ஷெல் மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள கிராமங்களை குறி வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+