ஒரு லெவலுக்கு மேல் பேச்சே கிடையாது.. வீச்சு தான்! பாக். ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா தீவிர பதிலடி
ஜம்மு: இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 26 இடங்களில் ட்ரோன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு அத்துமீறல் செய்து வருகிறது. இதன் காரணமாக காஷ்மீர் முதல் குஜராத் வரை பல்வேறு இடங்களில் செயற்கை மின்தடை ஏற்படுத்தப்பட்டது.
இதில் பஞ்சாபில் பிரோஸ்பூர் என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் இருக்கும் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.மேலும் காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் குண்டுகளை இடைமறித்து அழித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ஆட்டம் ஓவராக இருந்ததால், தற்போது இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. ஜம்மு செக்டார் பகுதியில், இந்திய படை தற்போது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் படை தற்போது பின்வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Drones have been sighted at 26 locations along the International Border and LoC with Pakistan. These include suspected armed drones. The locations include Baramulla, Srinagar, Avantipora, Nagrota, Jammu, Ferozpur, Pathankot, Fazilka, Lalgarh Jatta, Jaisalmer, Barmer, Bhuj,…
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) May 9, 2025
எல்லை கட்டுப்பாட்டு பகுதி மற்றும் சர்வதேச எல்லையில் இந்த தாக்குதலை இந்தியா தீவிர படுத்திருக்கிறது. தொடர்ந்து ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதை அடுத்து வேறு வழியின்றி இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதில் பல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயம் அடைந்து இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பல்வேறு இடங்களில் ட்ரோன் அனுப்பி பாகிஸ்தான் அட்டூழியத்தில் ஈடுபட்டதால் அதனை இந்தியா தடுத்து தற்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே இந்திய எல்லையோர பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுடைய குடியிருப்பை விட்டு இன்று இரவு வெளியே வர வேண்டாம் என்று நமது நாட்டு ராணுவம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications