For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரம்பித்தது ட்ரம்ப்பின் ஆட்டம்.. இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்க விசா மறுப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் விசா மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சிரியா உட்பட 7 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு விசா வழங்க அதிபர் ட்ரம்ப் தடை போட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்தியா கிடையாது என்றபோதிலும், இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் விளையாட்டு வீரருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Indian Muslim athlete denied US visa due to 'current policy'

ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களுக்கு எதிராக தனது அரசு தடை உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியது வெறும் வார்த்தைதானோ என்ற சந்தேகம் எழுகிறது. காஷ்மீரை சேர்ந்த 26 வயது தன்வீர் ஹூசைன் என்ற snowshoe பனிச்சறுக்கு வீரருக்குதான் டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி விசா மறுத்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற உள்ள உலக பனிச்சறுக்கு தொடரில் பங்கேற்க விசாவுக்கு விண்ணப்பித்த தன்வீர் ஹூசைன் விசா மறுக்கப்பட்டுள்ளது. தூதரக அதிகாரியான பெண் ஒருவர், தற்போதுள்ள அமெரிக்க விதிமுறைப்படி, உங்களுக்கு விசா வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தில் விசாரித்தபோது, தனிப்பட்ட நபர் குறித்த விவரங்களை அவர்களின் தனிப்பட்ட நலன் கருதி பகிர்ந்து கொள்ள முடியாது என கூறிவிட்டனர். அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கை, முஸ்லிம்களுக்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

English summary
A snowshoe athlete from Indian-administered Kashmir has been denied a US visa because of the "current US policy", his coach has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X