900 வருடமாக நிலவிய தண்ணீர் பஞ்சம்.. சிந்து சமவெளியை நாசமாக்கிய கொடூரம்.. அதிர வைக்கும் ஆய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிந்து சமவெளியை நாசமாக்கிய கொடூரம்.. அதிர வைக்கும் ஆய்வு- வீடியோ

  டெல்லி: சிந்து சமவெளியில் இருந்த மக்கள் 900 வருடமாக நிலவிய கொடூர தண்ணீர் பஞ்சம் காரணமாகவே, அந்த பகுதியைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

  சுமார் 4,350 வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. உலகின் பழமையான நாகரீகங்களில் சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த பகுதியில் வசித்த மக்கள் மிகவும் முன்னேறியவர்கள். அப்போதே மற்ற நாகரீக மக்களுடன் இவர்கள் தொடர்பில் இருந்தார்கள், வியாபாரம் செய்தார்கள், கல்விமுறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆய்வு

  ஆய்வு

  காரக்பூர் ஐஐடியில் பேராசிரியர் அணில் கே குப்தா தலைமையில் நடந்த ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சி குழுவில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்னிந்தியா பகுதிகளை சேர்ந்த ஆய்வாளர்களும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இவர்கள் கடந்த சில மாதங்களாக செய்த ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.

  பஞ்சம்

  பஞ்சம்

  இங்கு வசித்த மக்கள் அதிக அளவில் தண்ணீர் பஞ்சத்தால் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 900 வருடங்கள் இப்படி தண்ணீர் பஞ்சம் நிலவியதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவில் குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே சண்டைகள் கூட வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  எப்படி ஏற்பட்டது

  எப்படி ஏற்பட்டது

  இது அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் காரணமாக உருவாகி இருக்கிறது. எல் நினோ பாதிப்பு, பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றம், திடீர் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவையே இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் எனப்பட்டுள்ளது. நதிகள் அதிகமாக வற்றி இருப்பதாகவும் இந்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இடம்பெயர்ந்தார்கள்

  இடம்பெயர்ந்தார்கள்

  இதனால் இவர்கள் 4,350 வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா நோக்கி இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். அப்போது தென்னிந்திய பகுதிகளில் கொஞ்சம் நல்ல காலநிலை நிலவி இருந்துள்ளது. அங்கு இருந்த மக்கள் மொத்தமாக நடந்தே இங்கே வந்துள்ளனர். அவர்கள் இப்படி நடந்து வந்த போது , அவர்களில் சிலர் மரணம் அடைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Indus Valley people migrated to South India due to 900 years of drought says, IIT Kharagpur research. It says that 4,350 years ago people migrated to South India for water.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற