For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோரக்பூர் கொடூரம்.. உ.பி முதல்வர் பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 60 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 60 பச்சிளம் குழந்தைகள் மிகப் பரிதாபமாக உயிரிழந்தன. இது உ.பி.யை அதிர வைத்துள்ளது.

Infant deaths: Cong says UP CM, health minister should resign

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், இந்த மரணத்திற்குக் காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் சப்ளையர், மாவட்ட நிர்வாகம் ஆகியவை மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.

இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குத்தான் தார்மீக பொறுப்பு அதிகம். தார்மீக ரீதியாக முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் இந்த கோரச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர்.

உ.பி. சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங், மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Congress today said Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Health Minister Siddharth Nath Singh should resign taking "moral responsibility" for the death of 30 infants at a state-run hospital in Gorakhpur. Congress spokesperson Manish Tiwari also demanded strict action against those responsible for the deaths, allegedly due to shortage of supply of liquid oxygen, at Baba Raghav Das Medical College in eastern Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X