விக்ரம் "ஐ" படம் நினைவிருக்கா.. "ஒரே அலறல்.." இளம்பெண்ணின் அழகை சிதைக்க முயன்ற இளைஞர்கள்! பகீர்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: ஐ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதேபோல பெண் ஒருவர் மீது நோய் நிரம்பிய ரத்தத்தைச் செலுத்த இளைஞன் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இங்கே சினாமாவில் இருந்து இளைஞர்கள் பலரும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலான விஷயங்கள் நல்ல விஷயங்களாகவே இருந்தாலும் சில முறை மோசமான விஷயங்களும் நடந்துவிடுகிறது.

Inspired by Tamil film I Youth tried to inject woman with infected blood

திருட்டு, கொள்ளை சம்பவங்களைப் படங்களிலும் சீரியல்களிலும் பார்க்கும் இளைஞர்கள் அதேபோல முயலும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கையே பரிதாபமாகப் பறிபோய்விடுகிறது.

என்ன நடந்தது: இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கே இந்தூரில் பெண் ஒருவருக்கு நோய் பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசி மூலம் செலுத்த முயன்றதற்காக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதை போலீசார் உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர், சஞ்சய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சஞ்சய் என்ற அந்த இளைஞன் அப்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். காதலை அந்த பெண்ணிடம் தெரியப்படுத்திய போதிலும், அதை அவர் ஏற்கவில்லையாம். இதனால் கோபமடைந்த அந்த நபர் ஊசி மூலம் அந்த பெண்ணுக்கு நோயைச் செலுத்த பிளான் போட்டு இருக்கிறார். சஞ்சயை போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஐ திரைப்படம்: அதில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சஞ்சய் என்ற அந்த இளைஞன், தமிழில் வெளியான 'ஐ' திரைப்படத்தைப் பார்த்தே இப்படிச் செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ஐ திரைப்படத்தில் விக்ரம் உடலில் மோசமான வைரஸை செலுத்திவிடுவார்கள். இதனால் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு அழகான தோற்றத்தை விக்ரம் இழப்பார்.

அதையே தான் இந்த நபர் செய்ய முயன்றுள்ளார். சஞ்சய் தனது நண்பரான கிஷோர் என்பவருடன் சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசி மூலம் செலுத்த முயன்றபோது அவர் சிக்கியுள்ளார். பிச்சைக்காரர் ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை அவர்கள் செலுத்தத் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தட்டி தூக்கிய போலீசார்: இதையடுத்து சஞ்சய் மற்றும் கிஷோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னைப் பின்தொடர்ந்து, ஊசி மூலம் அந்த ரத்தத்தைச் செலுத்த முயன்றதாகவும், ஆனால் எப்படியோ தான் தப்பித்துவிட்டதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சஞ்சையை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அவன் ஏதோ எமோஷ்னலாகி ஒரு முறை தவறு செய்தவன் இல்லையாம்.

அவன் மீண்டும் மீண்டும் தப்பு செய்யும் ஒரு repeat offender என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவன் மீது ஏற்கனவே 11 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அந்த சிரிஞ்சை கைப்பற்றிய போலீசார் அந்த ரத்தத்தைப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சஞ்சய் மற்றும் கிஷோர் இணைந்து என்ன வகையான நோய் இருக்கும் ரத்தத்தை அந்த பெண் மீது செலுத்த முயன்றார் என்பதை உறுதி செய்யவே போலீசார் அதைச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த சோதனையில் கிடைக்கும் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+