Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி, ஆடை பூங்கா- ராஜ்யசபாவில் மத்திய அரசு தந்த 'மகிழ்ச்சி' தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் விருதுநகர், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகாவில் கலபுர்கி, மத்தியப் பிரதேசத்தில் தார், உத்தரபிரதேசத்தில் லக்னோ, தெலங்கானாவில் வாரங்கல், மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை பூங்காக்கள் (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா அளித்த பதில்: ஜவுளித் தொழிலின் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டல் சங்கிலிக்கும் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், 2021-22-ம் ஆண்டு முதல் 2027-28-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,445 கோடி ரூபாய் திட்ட ஒதுக்கீட்டில் கிரீன்ஃபீல்ட் / பிரவுன்ஃபீல்ட் தளங்களில் 7 பிரதமரின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடை பூங்காக்களை(பி.எம். மித்ரா ) அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விருதுநகரில் ஜவுளி பூங்கா

தமிழ்நாட்டில் விருதுநகர், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகாவில் கலபுர்கி, மத்தியப் பிரதேசத்தில் தார், உத்தரபிரதேசத்தில் லக்னோ, தெலங்கானாவில் வாரங்கல், மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 பகுதிகளை இப்பூங்காக்களை அமைப்பதற்காக மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இந்தப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டால், ஒவ்வொரு பிரதமரின் மித்ரா பூங்காவும் ஜவுளி மதிப்புக் கூட்டல் சங்கிலியின் அனைத்து அம்சங்களிலும் 3 லட்சம் (நேரடி/மறைமுக) வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பல்வேறு மாநிலங்களுடன் ரூ.18,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும் ஏற்றுமதித் திறனை அதிகரிப்பதற்காக, இந்தியா இதுவரை பல்வேறு வர்த்தக கூட்டாளிகளுடன் 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் 6 முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஜவுளி அமைச்சகமானது சமர்த் என்ற ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேவை அடிப்படையிலான, வேலைவாய்ப்பு சார்ந்த தேசிய தொழில்திறன் தகுதி சட்டக வரைவுக்கு இணக்கமான திறன் மேம்பாட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

அமைப்பு சார்ந்த ஜவுளித் துறை (நூல் நூற்பு மற்றும் நெசவு நீங்கலாக) மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பாரம்பரியத் துறைகளில் தொழில் திறன் மற்றும் இருக்கும் திறன்களை புதுப்பித்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கான தொழில்துறையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதையும் துணைபுரிவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 113 குடிநீர் தர பரிசோதனை ஆய்வகங்கள்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளபடி, தற்போது வரை 2,182 குடிநீர் தர பரிசோதனை ஆய்வகங்கள் (தமிழ்நாட்டில் 113 உட்பட) பல்வேறு நிலைகளில் உள்ளன என்று லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் வி. சோமண்ணா தெரிவித்தார்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தொழில்நுட்ப உதவி

மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் பிஐஎஸ்: 10500 தரநிலைகள், குழாய் மூலம் குடிநீர் வழங்கல் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் தரத்திற்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குடிநீர் மாநில பட்டியலில் இருப்பதால், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உள்ள செயல்பாடுகள் உட்பட குடிநீர் வழங்கல் திட்டங்களின் திட்டமிடல், ஒப்புதல், செயல்படுத்துதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் பொறுப்பு மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 62,898 பெண்களுக்கு குடிநீர் தர பரிசோதனை பயிற்சி

அத்துடன் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், நீர் தரக் கண்காணிப்பு மற்றும் கூர்கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஆண்டு ஒதுக்கீட்டில் 2% வரை பயன்படுத்தலாம். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நீரின் தரத்திற்கான நீர் மாதிரிகளைச் சோதித்தல், குடிநீர் மாதிரி சேகரிப்பு, அறிக்கை அளித்தல், கண்காணித்தல் மற்றும் கூர்கண்காணிப்பு ஆகியவற்றுக்காகஆன்லைன் ஜே.ஜே.எம் – நீர் தர மேலாண்மை தகவல் அமைப்பு போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. நீர் தர மேலாண்மை முறை மூலம் தெரிவிக்கப்பட்ட மாநில வாரியான நீர் தர சோதனை விவரங்கள் ஜல் ஜீவன் இயக்கத்தின் இணைய தளத்தில் காணலாம். மேலும் அவற்றை பின்வரும் முகவரியிலும் அணுகலாம்: https://ejalshakti.gov.in/WQMIS/Main/report

நீரின் தரத்தை கண்காணிக்க சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கிராம அளவில் கள பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி நீர் தர சோதனையை நடத்த ஒவ்வொரு கிராமத்திலும் 5 நபர்களை, முக்கியமாகப் பெண்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கவும், அதை நீர் தர மேலாண்மை தகவல் அமைப்பின் இணையதளத்தில் தெரிவிக்கவும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் தெரிவிக்கப்பட்டபடி, தற்போது வரை, 24.81 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு (தமிழ்நாட்டில் 62,898 பேர் உட்பட) கள பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி தண்ணீரைப் பரிசோதனை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் மத்திய இணை அமைச்சர் சோமண்ணா கூறினார்.

கர்நாடகா விவகாரத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

முன்னதாக இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு சபைகள் கூடிய போது ஆளும் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பொதுவாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் முழக்கமிடுவதும் சபை நடவடிக்கைகள் முடக்கப்படுவதும் வழக்கம். இன்று கர்நாடகாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அரசு ஒப்பந்தங்களில் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இதற்கு எதிராக பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு இடஒதுக்கீடும் வழங்கக் கூடாது; மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; காங்கிரஸ் கட்சிதான் அரசியல் சாசனத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்றும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவாதத்தின் போது பதிலளித்த ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க முயற்சிக்காது; அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில்தான் காங்கிரஸ் செயல்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+