For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலை பாட்டி.. சோலார் தாத்தா.. மும்பை போராட்டத்தில் கலக்கும் விவசாயிகள்!

மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளில் சிலர் வைரல் ஆகி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ

    மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளில் சிலர் வைரல் ஆகி இருக்கிறார்கள். நிறைய புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.

    6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன.

    மொபைல் சார்ஜ்

    மொபைல் சார்ஜ்

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஹீரோக்களில் 48 வயது நிரம்பிய கணேஷ்கான் என்பவரும் முக்கியமானவர். இவர் தன்னுடைய தலையில் சோலார் பேனல் ஒன்றை வைத்து இருக்கிறார். அதன்முலம் அங்கு இருக்கும் விவசாயிகளுக்கு சார்ஜ் ஏற்றி கொடுக்கிறார் இந்த விவசாய விஞ்ஞானி. இவர் காட்டுப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    பாட்டி

    பாட்டி

    இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கே உணவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 60 வயது நிரம்பிய சுந்தரபாய் என்று பாட்டி அங்கு இருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கடலை கொடுத்து பசியாற்றி வருகிறார். இதற்காக அவர் ஒரு மூட்டையை முதிய வயதில் சுமந்து வருகிறார்.

    எம்மதமும் எம் மதம்

    இந்த போராட்டத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் நடந்து இருக்கிறது. எப்போது மத கலவரம் வரும் என்ற அளவிற்கு பதற்றம் நிலவி வந்த வடஇந்தியாவில் தற்போது பெரிய மாற்றம் நிலவி இருக்கிறது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இந்து விவசாயிகளுக்கு உணவு கொடுக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.

    ஒரே படம்

    மும்பையில் இருக்கும் பெரிய பாலங்களில் ஒன்றான ஜேஜே பாலத்தில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அலுவலகத்தில் இருந்து ஒருவர் இந்த படத்தை முதலில் பேஸ்புக்கில் வெளியிட்டார். மும்பையில் விவசாயிகள் எப்படி ஒய்வு இன்றி போராடுகிறார்கள் என்பதற்கு அதிகாலை 5 மணிக்கு எடுக்கப்பட்ட இந்த புகைப்படமே சிறந்த உதாரணம்.

    English summary
    Mumbai farmers match got viral in social media. There are 6 reasons behind the Farmers protest in Mumbai. The Protest led by more than 35,000 farmers of All Indian Kisan Sabha (AIKS), demanding a complete waiver of loans, arrived in Mumbai on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X