கொரோனா தடுப்பூசி போட்டதால் காந்த சக்தி அதிகரிச்சுருச்சாம்.. உடம்பில் ஒட்டுதாம் இரும்பு பொருட்கள்
நாசிக்/ காங்டாக்: மகாராஷ்டிரா, சிக்கிம் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2 பேருக்கு உடலில் காந்த சக்தி அதிகரித்துவிட்டது; இதனால் இரும்பு பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்கின்றன என்கிற வினோத புகார் எழுந்துள்ளது.
நாசிக்கை சேர்ந்த 70 வயது முதியவர் அரவிந்த் சோனார். இவர் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கடந்த 2-ம் தேதி 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார்.

விளையாட்டு வினையானது
அரவிந்த் சோனாரின் மகன், டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்ட ஒருவருக்கு காந்த சக்தி ஏற்பட்டது; இந்த வீடியோவை இணையத்தில் பார்த்தேன்; உங்களது உடலில் சோதித்து பார்க்கலாம் என விளையாட்டாகத்தான் கூறினாராம். வீட்டில் இருந்த இரும்பு பொருட்கள் அரவிந்த் சோனாரின் உடலில் ஒட்ட வைக்க முயற்சித்தனர்.

வீடியோ வெளியீடு
உண்மையிலேயே இரும்பு பொருட்கள் அரவிந்த் சோனாரின் உடலில் ஒட்டிக் கொண்டுவிட்டனவாம். இதனை அப்படியே வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டிருக்கின்றனர். இதே புகார் இப்போது சிக்கிமிலும் எழுந்துள்ளது.

சிக்கிமில் புகார்
கிழக்கு சிக்கிமில் 52 வயது நபரான பூட்டியா, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாராம். இதனைத் தொடர்ந்து அவரது உடலிலும் காந்த சக்தி அகரித்துவிட்டதாம். இப்போது பூட்டியா உடலில் ஸ்பூன் உள்ளிட்ட பொருட்கள் ஒட்டிக் கொள்கின்றனவாம்.

உறுதி செய்த போலீஸ்
இதையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். போலீசாரும் விசாரணை நடத்தியதுடன் அவரது உடலில் ஸ்பூன் உள்ளிட்டவற்றை வைத்தும் பரிசோதித்தனர். அப்போது பூட்டியா சொல்வது உண்மை என்பதை புரிந்து கொண்டனராம். இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications