ஐ.பி.எல். முழு அட்டவணை: ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கம்
14வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை டெல்லியை எதிர்த்து களம் காண்கிறது.
மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோதி மைதானத்தில் பிளே ஆஃப் போட்டிகளும், மே 30-ல் இறுதிப் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து, வழக்கம்போல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிற செய்திகள்:
- திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு
- அப்பா தரப் போகும் பணம்; சேப்பாக்கம் நிலவரம்!' - நேர்காணலில் உதயநிதி உணர்த்தியது என்ன?
- ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 பேர்: குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு
- இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் - திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?













Click it and Unblock the Notifications