அமித்ஷாவை விமர்சித்த பிரதமர் மோடி? இதுதான் ஊமைக்குத்தா? ஜார்கண்ட்டில் சொன்னதை கவனிச்சீங்களா..
ராஞ்சி: ஜார்கண்ட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் கூறிய கருத்துகள் என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மறைமுகமாக விமர்சனம் செய்தாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்துக்கு கடந்த 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்நிலையில் தான் ஜார்கண்ட் சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விரைவில் ஜார்கண்ட்டுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்த்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
அதன்படி ராஞ்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.660 கோடி மதிப்பிலான பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல் டாடா நகரில் இருந்து 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆட்சியில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:
ஜார்கண்ட் மாநிலத்துக்கு 3 முக்கிய எதிரிகள் உள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்டிய ஜனதாதளம் (லாலு பிரசாத் கட்சி) மற்றும் காங்கிரஸ் இந்த 3 கட்சிகள் தான் எதிரிகளாகும். காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக ஜார்கண்ட் மீது வெறுப்புணர்வை கொண்டுள்ளது. பீகாரில் இருந்து பிரிந்து ஜார்கண்ட் தனி மாநிலமானதால் ராஷ்ட்ரிய ஜனதாதளம் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பழங்குடியின மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து தங்களுக்கானதாக இணைத்து கொள்கின்றனர்.
நாட்டிலேயே நேர்மையற்ற கட்சியாகவும், ஊழல் நிறைந்த கட்சியாகவும் இருந்தால் அது காங்கிரஸ் தான். இப்போது காங்கிரஸ் கட்சியின் பாதையை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பின்பற்றி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஜார்கண்ட் மாநிலத்தை அந்த கட்சி கொள்ளையடித்துள்ளது. ஊழலுக்காக காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் ஒரே பள்ளியில் பயிற்சி எடுக்கின்றன. மாநிலத்தில் அடுத்தாக பாஜக ஆட்சி அமைந்தவுடன் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளும் முழுமையாக விசாரிக்கப்படும். இதனை நான் உறுதியாக கூறுகிறோம்.
மேலும் ஜார்கண்ட்டில் ஊடுருவல்கள் உள்ளன. குறிப்பாக வங்கதேசம் மற்றும் ரோஹிங்கா ஊடுருவல்காரர்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து செயல்பட்டு வருகிறது. வாக்கு வங்கிக்காக அவர்களை ஜார்கண்ட்டுக்குள் முக்தி மோர்ச்சா கட்சி அனுமதிக்கிறது. இந்த ஊடுருவல்காரர்கள் ஜார்கண்ட்டின் சந்தால் பர்கானாஸ் மற்றும் கோல்ஹான் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் அச்சுறுத்தலாக உள்ளன. இந்த இடங்களில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை என்பது சரிந்து வருகிறது.
ஊடுருவல்காரர்கள் பஞ்சாய்த்தை கட்டுக்குள் எடுக்கின்றனர். அதேபோல் இந்த மாநிலத்தின் மகள்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். நிலத்தை பறிக்கின்றனர்.ஜார்கண்ட்டில் வசிக்கும் மக்கள் தற்போது பாதுகாப்பாற்ற நிலையை உணர்கின்றனர். இதனால் முதலில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பழங்குடியினரின் அடையாளத்தை காப்பாற்றும் முனைப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். இவரிடம் முதல்வர் பதவியை பறித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துரோகம் இழைத்துவிட்டது.'' என சாடினார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் ஊடுருவல்காரர்கள் தொடர்பான பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிரதமர் மோடி வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிஙங்யாக்கள் ஊடுருவல்காரர்கள் ஜார்கண்ட்டில் குடியேறுவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நம் நாட்டில் நுழைய வேண்டும் என்றால் இந்தியா - வங்கதேச எல்லையை கடந்து மேற்கு வங்கம் வழியாக தான் ஜார்கண்ட்டை அடைய முடியும். அப்படி பார்த்தால் அவர்களை எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர் தான் கண்காணித்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் மோடி சொல்வது போல் ஜார்கண்ட்டில் ஊடுருவல்கள் அதிகமாகி இருந்தால் எல்லை பாதுகாப்பு படையினர் அலட்சியத்தை பிரதமர் ஒப்புக்கொள்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லை பாதுகாப்பு படை என்பது அமித்ஷா நிர்வகிக்கும் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும். இதனால் அமித்ஷாவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தாரா? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications