For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதை திசை திருப்ப இந்த முயற்சி.. காஷ்மீரில் குவிக்கப்படும் ராணுவத்தால் பதற்றம்.. என்ன நடக்கிறது?

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருவதற்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருவதற்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. அதேபோல் ஏற்கனவே அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தல் முடிந்த போது காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர். அதன்பின் கடந்த சனிக்கிழமை 10 ஆயிரம் வீரர்கள் மீண்டும் குவிக்கப்பட்டார்கள்.

இன்று என்ன

இன்று என்ன

இந்த நிலையில் இன்று மீண்டும் 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக இந்திய உளவுத்துறை சார்பாக இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இதனால் அங்கு தீவிரமாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

அதே சமயம் ராணுவ குவிப்பிற்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது, வேறு ஏதாவது பெரிய விஷயத்தை மறைக்க ஆசைப்பட்டு மத்திய அரசு காஷ்மீரில் ராணுவத்தை இப்படி குவிக்கலாம், என்று கூறுகிறார்கள். டிவிட்டரில் நெட்டிசன்கள் பலர் இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.

இரண்டு மாதம்

இரண்டு மாதம்

கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பான சூழ்நிலையே நிலவி வருகிறது. பெரிய சண்டைகள், அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் அமைதியான சூழ்நிலையே நிலவி வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், எப்படி காஷ்மீரில் திடீர் என்று ராணுவம் குவிக்கப்படுகிறது. இதற்கு பின் ஏதோ காரணம் உள்ளது.

என்ன பொருளாதாரம்

என்ன பொருளாதாரம்

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 35ஏ சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் ராணுவம் குவிக்கப்பட்டு எல்லாம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்றும் கூட தகவல்கள் வருகிறது.

வேறு என்ன

வேறு ஏதாவது பெரிய விஷயத்தை மத்திய அரசு செய்ய போகிறது. அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இப்படி செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நெட்டிசனும் இதே சந்தேகத்தைதான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Is the sudden protection increase in Kashmir Valley a diversion for something big? ask Netizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X