இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இன்று இறுதி முடிவு?
டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து இன்று இறுதி முடிவெடுக்கப்பட இருக்கிறது.
இலங்கையில் வரும் நவ.15ந் தேதி முதல் 17ந் தேதி வரை காமன்வெல்த் நாடுகள் மாநாடு,நடைபெறுகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான அந்நாட்டு ராணுவம் போர்க் குற்றங்களை நிகழ்த்தியதால் இம்மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று, கனடா அறிவித்துள்ளது. இதேபோல் இலங்கை மாநாட்டை கென்யாவும் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவும் இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ செய்தியாளர் இசைப்பிரியா உயிரோடு கைது செய்யப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது பற்றி இன்று முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications