வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்.. சாதனை படைத்த இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இஸ்ரோ தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் 2 உள்ளிட்ட பல திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் இதுபோல செயற்கைகோள் அனுப்பும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் இன்று மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவும்.
[தமிழகத்தை நெருங்கும் கஜா புயல்.. தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்.. இப்போது எங்குள்ளது?]

என்ன செயற்கைகோள்
3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவ கூடியது. உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் இது பயன்படுத்தப்படும்.

கவுண்டவுன்
இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை ஏவப்படுகிறது. இன்று மாலை ஐந்து மணி 8 நிமிடத்துக்கு ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்றே தொடங்கிவிட்டது. நேற்று பிற்பகல் 2 மணி 50 நிமிடத்திற்கு தொடங்கியது. 25 மணி 38 நிமிட கவுன்ட் டவுன் முடிந்ததும் விண்ணில் ஏவப்பட்டது .

7 மாதத்திற்கு பின்
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ விண்ணில் ஏவி இருக்கிறது. 7 மாதங்களுக்கும் பின் இப்போதுதான் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.
|
வெற்றிகரமாக ஏவப்பட்டது
கஜா புயலால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா என்று சந்தேகம் வந்தது. இந்த நிலையில் , திட்டமிட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைகோள் நிறுத்தப்படும், இது 10 வருட ஆய்வு பணிகளை செய்யும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications