சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை நெருங்கும் கஜா புயல்.. தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்.. இப்போது எங்குள்ளது?

கஜா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தை நெருங்கும் கஜா புயல், தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்.

    சென்னை: கஜா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

    இந்த புயலின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கஜா புயல், இன்று தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 15ம் தேதி மதியம் பாம்பன் கடலூர் இடையே இந்த புயல் கரையை கடக்க உள்ளது.

    [வருகிறது கஜா புயல்.. இன்றிலிருந்து கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை]

     மாறி மாறி வரும் புயல்

    மாறி மாறி வரும் புயல்

    கஜா புயல் தொடக்கத்தில் 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பயணித்தது. ஆனால் இந்திய பெருங்கடலில் திடீர் என்று ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக புயலின் வேகம் குறைந்தது. இதனால் புயலில் வேகம் 5 கிமீக்கும் குறைவாக சென்றது. புயலும் சென்னையை நோக்கி செல்லாமல், பாம்பனை நோக்கி நகர்ந்தது.

     வேகமும் அதிகரிக்கிறது

    வேகமும் அதிகரிக்கிறது

    இதையடுத்து நேற்று மதியம் புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்து. திடீர் என்று தமிழகத்தை நோக்கி புயல் வேகமாக வீச தொடங்கியது. இது புயல் வலுவடைவதை குறிப்பதாக வானிலை மைய அதிகாரிகள் குறிப்பிட்டனர். புயல் 10 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரித்தது.

     இப்போது எங்குள்ளது

    இப்போது எங்குள்ளது

    இப்போது இந்த புயல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. மீண்டும் இந்த புயல் அதன் அதிகபட்ச வேகத்தை அடைந்து இருக்கிறது. இது தற்போது பாம்பனில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

     எப்படி வீசும்

    எப்படி வீசும்

    15ம் தேதி மதியம் சரியாக புயல் கரையை கடக்கும். இந்த புயல் இன்று அதன் முழு வேகத்தை அடையும் என்று கூறப்படுகிறது. அதாவது 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தை புயல் அடையும். அதன்பின் நாளை முழு வேகமான 120 கிலோமீட்டர் வேகத்தை அடையும்.

    English summary
    Gaja Storm getting closer to Tamilnadu with the increase in speed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X