நேரம் வந்துவிட்டது.. நிலவிற்கு மனிதர்களை குடியேற்றுவோம்.. அதிரடியாக அறிவித்தது நாசா
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மீண்டும் துரிதமாக செயல்படுத்த நாசா முடிவெடுத்து இருக்கிறது.
நியூயார்க்: நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மீண்டும் துரிதமாக செயல்படுத்த நாசா முடிவெடுத்து இருக்கிறது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது.
மனித இனம் மீண்டும் ஒரு மகத்தான சாதனைக்கு தயாராகிவிட்டது. பூமியை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மனித இனம் தற்போது நிலவை நோக்கி பயன்பட உள்ளது.
முதன்முதலில் நிலவில் கால் பதித்த, அமெரிக்காதான் இதையும் முதலாவதாக செய்ய உள்ளது. ஆம், அமெரிக்கா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது... இந்த முறை நிரந்தரமாக!

அமெரிக்காவும் நிலவும்
நிலவு ஒரு நல்ல தோழன் என்று ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் இருக்கிறது. நிலவிற்கு முதலில் நண்பன் ஆனது அமெரிக்கா என்றுதான் சொல்ல வேண்டும். 1969 ஜூலை 20ல் மனிதன் நிலவில் இறங்கியதில் இருந்து இந்த உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால் பல பல அரசியல் காரணங்களால், 1972ல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தியது நாசா.

அவசர ஆலோசனை
இந்த நிலையில் தான் சென்ற வருடம் ஜனவரி மாதம் நாசா அமெரிக்காவில் உள்ள சில தொழில்நுட்ப நிறுவனங்களுடனும், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் ஆலோசனை நடத்தியது. ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆர்ஜின் உள்ளிட்ட முக்கிய ஸ்பேஸ் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டது. நிலவிற்கு அருகில் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்று கட்டுவது குறித்தும், நிலவில் கட்டிடம் எழுப்புவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாக அப்போது தகவல் எழுந்தது.
முக்கிய கூட்டம்
இந்த நிலையில்தான் நேற்று இந்திய நேரப்படி இரவு 11.45 மணிக்கு நாசாவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் ஒன்று நடந்தது. அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இவர் என்ன பேச போகிறார் என்று உலகே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது. அவர் பேசியது, வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக எதிர்காலத்தில் மாறும்.

நிலவில் மனிதன்
நிலவின் மீது மீண்டும் நம்முடைய கண்கள் திரும்பியுள்ளது. ஆனால் இந்த முறை நிலவில் சென்று கால் பதிக்க அல்ல. நிலவிற்கு சென்று வர. சரியாக சொல்ல வேண்டும் என்றால், திரும்ப வரும் திட்டம் கூட இல்லை. நிலவிலேயே நிரந்தரம்மாக குடிபெயர, நேரம் வந்துவிட்டது. அமெரிக்கா இவ்வளவு வருடம் கற்றுக்கொண்டதை உலகிற்கு வெளிக்காட்டும் நேரம் இதுதான். நம்முடைய அசாத்திய அறிவை வைத்து நிலவில் மொத்தமாக குடியேறுவோம், என்று அவர் பேச்சு நீண்டது.

ஆம் நிலவிற்கு செல்கிறார்கள்
நிலவில் குடிபெயர்வோம் என்று அவர் சொன்ன அடுத்த நொடி கைதட்டல் பெருகியது. ஆம், அமெரிக்க, நிலவிற்கு மக்களை நிரந்தமாக அனுப்ப போகிறது. இதற்காக பல வருடம் காத்திருக்க வேண்டியது இல்லை. இன்னும் 6 வருடங்கள் காத்திருந்தால் போதும். ஆம், 2024ல் நிலவிற்கு நாசா மனிதர்களை நிரந்தரமாக குடிபெயர அனுப்ப உள்ளது. இதற்கான பணிகள் நேற்று இரவு 11.45ல் இருந்தே தொடங்கிவிட்டது.

தனியாரின் வேலை என்ன
இதில் ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஒரிஜின் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழும். ஆம், அவர்கள்தான் நிலவிற்கு செல்லு மனிதர்களுக்கு டிராவல்ஸாக இருக்க போகிறார்கள். இரண்டு நிறுவனமும், பூமியின் வட்டப்பாதைக்கு வெளியே சென்று மீண்டும் பாதுகாப்பாக திரும்பும் ராக்கெட் தொழில்நுட்பத்தை வைத்துள்ளது. இதை நிலவின் பயணத்திற்கு நாசா பயன்படுத்த உள்ளது. அதோடு அங்கு நடக்கும் கட்டுமான பணியிலும் இவர்கள் உதவுவார்கள்.

இப்போது ஏன்
கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரோவின் செயலிழந்த சந்திராயன் 1 கொடுத்த பழைய தகவல்களை ஆய்வு செய்த நாசா, நிலவில் பெரிய அளவில் ஐஸ் பாறைகள் இருப்பதை கண்டுபிடித்தது. இதை கடலாக மாற்றலாம் என்று நாசா நினைக்கிறது. இதனால் அங்கு குடியேறுவது சாத்தியம் என்றும் நாசா கூறியுள்ளது. இதனால்தான் மீண்டும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இப்படி முடிந்தது
மைக் பென்சின் பேச்சு இப்படியாக முடிந்தது, ''அந்த காலம் முடிந்துவிட்டது.. இது நமக்கான நேரம், அமெரிக்க மக்களுக்கான நேரம். அமெரிக்கா மீண்டும் மனித குலத்தை விண்வெளியில் நிறுத்தும்'' என்றார். ஆம், மனித குலத்தின் மகத்தான பயணம் தொடங்கியுள்ளது. இதில் என்ன நன்மைகள், என்ன தீமைகள் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications