For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“பாத்ரூம் ஷவர்” ஆக மாறிப் போன மும்பை மெட்ரோ ரயில்.. டிவிட்டரில் கிண்டியெடுத்த மக்கள்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் நேற்று பெய்த கன மழையை விட அந்த கன மழையால் மெட்ரோ ரயில் பயணத்தில் மக்கள் பட்ட பாடுதான் பெரும் செய்தியாகியுள்ளது.

குளியலறையில் உள்ள ஷவர் போல மாறி விட்டது மெட்ரோ ரயில்கள்.. அதாவது மழை வெளியே பெய்கிறதா அல்லது உள்ளே பெய்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு தொர தொரவென ஒழுகியது மெட்ரோ ரயில்கள்.

இதைப் படம் பிடித்து டிவிட்டரில் போட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை காய்ச்சி எடுத்து விட்டனர்.

புகைப்படம் மட்டுமல்லாமல் வீடியோவையும் அப்லோட் செய்து வைரல் ஆக்கி விட்டனர்.

ஜூன் 8ம் தேதி முதல்

ஜூன் 8ம் தேதி முதல்

ஜூன் 8ம் தேதி முதல் மும்பையில் மெட்ரோ ரயில் ஓடி வருகிறது. பெரும் தாமதத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்டபோதிலும் மக்களிடையே நல்ல வரவேறைப் பெற்றுள்ளது இது.

ஆனால் மழை பேஞ்சா ஒழுகுதே..

ஆனால் மழை பேஞ்சா ஒழுகுதே..

ஆனால் நேற்று பெய்த மழையால் மெட்ரோ ரயிலின் வண்டவாளம்.. தண்டவாளத்தில் ஏறி விட்டது. ஆம் நேற்று ஒரு ரயிலின் பெட்டியில் மழை உள்ளே சர்ரென்று பெய்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர்.

ஷவர் குளியலே போடலாம்

ஷவர் குளியலே போடலாம்

கிட்டத்தட்ட குளியலறை ஷவர் போல அது காணப்பட்டது.

எடுடா போட்டோவை.. புடிடா டிவிட்டரை

எடுடா போட்டோவை.. புடிடா டிவிட்டரை

இதையடுத்து அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்கள் உடனடியாக இதைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து டிவிட்டரில் போட்டு மெட்ரோ ரயிலின் மானத்தை வாங்கி விட்டனர்.

சகட்டு மேனிக்கு கிண்டல்

சகட்டு மேனிக்கு கிண்டல்

புகைப்படம், வீடியோவைப் பார்த்தவர்கள் அடித்த கிண்டல்தான் செமையாக இருந்தது.

குளிக்காட்டி பரவாயில்லை

குளிக்காட்டி பரவாயில்லை

ஒருவர் இப்படிக் கருத்துச் சொல்லியிருந்தார்.. ஆபீஸுக்கு நேரமாகி விட்டதா, குளிக்கலையா.. கவலைப்படாதீங்க, மெட்ரோ ரயிலில் ஷவர் அட்டாச் பண்ணியிருக்கிறார்கள் அதில் குளிக்கலாம்...

அட்டே ஆச்சரியம்…

அட்டே ஆச்சரியம்…

மெட்ரோ டிரெயின் இப்போது மெட்ரோ ரெய்ன் ஆக மாறி விட்டதே.. அபாரம் என்று ஆச்சரியப்பட்டிருந்தார்.

ஏசி பெட்டி காலி

ஏசி பெட்டி காலி

மழை காரணமாக ஒரு ரயிலில் ஏசி இயந்திரம் பழுதாகி விட்டது. இருப்பினும் உடனடியாக அதைச் சரி செய்து விட்டனர்.

வெர்சோவா முதல் ககோத்பர் வரை

வெர்சோவா முதல் ககோத்பர் வரை

தற்போது மும்பையில் வெர்சோவா முதல் ககோத்பர் வரை 11.4 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

அனில் அம்பானி கையில்

அனில் அம்பானி கையில்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனம்தான் தற்போது இந்த ரயிலை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As heavy rains lashed Mumbai on Wednesday, photos and a video of a compartment of the Mumbai Metro with a wildly leaking roof went viral online. The Metro had opened with great fanfare on June 8 this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X