கட்சியா அது, சரியான நாடகக் கம்பெனி... ஆம் ஆத்மி மீது பாஜக பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆம் ஆத்மி கட்சி ஒரு நாடக நிறுவனம், தற்போது அவர்கள் புதிய நாடகம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் லோக்பால் மசோதா செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது பா.ஜ.க .

நேற்று பா.ஜ.க தேசிய செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லேகி பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

Jan Lokpal Bill: BJP likens AAP to drama company

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது :-

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட சிலர் கட்சி தொடங்காதபோது அருண்ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜுடன் அமர்ந்து அவர்களின் கருத்துகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்தனர். தற்போது அவர்கள் ஜன் லோக் பால் என்ற புதிய நாடகத்தை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் நாடக நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அதாவது அந்த கட்சியே ஒரு நாடக நிறுவனம்.

காங்கிரஸ் எப்போதெல்லாம் நெருக்கடியில் சிக்குகிறதோ அப்போது பிரச்சினையை திசைதிருப்பிவிட்டு அந்த கட்சியை கெஜ்ரிவால் காப்பாற்றுகிறார். உதாரணத்திற்கு மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா மரணம் அடைந்த விவகாரத்தில் காரணத்தை அறிய மக்கள் விரும்பினர். அப்போது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் உத்தரவின்படி பாலியல் தொழில் நடைபெறும் இல்லத்தில் சோதனை நடத்த மறுத்ததாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டம் நடத்தினர்' என இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+