'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்'.. ஒருபக்கம் பாஜக.. மறுபக்கம் ஜெகன்.. பவன் முடிவால் நாயுடு ஹேப்பி
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போதவாக அறிவித்திருப்பது அம்மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு அதிர்ச்சி தரும் முடிவாக உள்ளது.
ஆந்திரா மாநிலத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. எனவே இந்தமுறையும் அதேபோல் தான் தேர்தல் நடைபெற போகிறது. கடந்த முறை (2019) நடந்த ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இங்கு எந்த இடத்திலுமே வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த சூழலில் இப்போதே ஆந்திராவில் தேர்தல் தொடர்பான வியூகங்கள் களை கட்டியுள்ளன,
அண்மையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திபாபு நாயடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக ஆந்திராவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பவன் கல்யாண் மாறி இருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவை பொறுத்த வரை கடந்த முறை தெலுங்கு தேசம் மோசமாக தோற்றுப்போக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் இந்த முறை தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பது, சந்திரபாபு நாயுடுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்கிறார்கள் ஆந்திர செய்தியாளர்கள்.
ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வியூகங்களை ஜெகன் எடுத்து வருகிறார். அதில் ஒன்றாகவே சந்திரபாபு நாயுடுவின் கைதும் பார்க்கப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கலில் சந்திரபாபு நாயுடு சிக்கிய இருப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகமே காரணம் என்று சொல்கிறார்கள். அதேநேரம் சட்டசபை தேர்தலில் அனுதாப அலை ஏற்பட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக மாறினாலும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டியை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார். தேவைப்பட்டால் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்கிற நிலையே உள்ளது.ஏனெனில் பாஜகவின் பல மசோதாக்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ஆதரவால் பல மசோதாக்கள் நிறைவேறி உள்ளன.
எனவே பவன் கல்யாண் இப்போது தெலுங்கு தேசத்துடன் இணைந்திருப்பதால், பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் ஆதரவு தருவாரா அல்லது வழக்கம் போல் வெளியில் இருந்தே ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் நேரடியாக ஜெகன் மோகன் ரெட்டி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். பாஜக உடன் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது பவன் கல்யாணின் ஜனசேனாவும் முறித்துக்கொண்டிருப்பது அந்த கட்சிக்கு தென்னிந்தியாவில் பின்னடைவை தரும் என்றே சொல்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications