ரணகளத்திலும் ருசியான சாப்பாடு... சிறைக்குள்ளேயே சட்டவிரோதமாக தங்கி சசிகலாவுக்காக சமைத்த பெண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ருசியான சாப்பாட்டை சமைத்து கொடுக்க சட்டவிரோதமாக பெண் ஒருவரை சசிகலா தன்னுடன் சிறையிலேயே தங்க வைத்திருந்ததாக புது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறைத் துறை அதிகாரிகளுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறையில் உள்ள சசிகலா சிறையிலும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக சிறை அறையில் தனி சமையலறையை சிறை அதிகாரிகளின் துணைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டதாக கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா வெளிச்சம் போட்டு காட்டினார்.

 விசாரணை

விசாரணை

இந்த முறைகேடுகள் எப்போது முதல் நடைபெற்று வருகின்றன. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்ற விசாரணையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தொடங்கியுள்ளார். இந்த விசாரணையிலாவது முழு தகவல் வருமா அல்லது அப்படியே மறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது.

 சிறையில் சமையல்

சிறையில் சமையல்

பெங்களூர் சிறையில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் தங்கி இருந்து சசிகலாவுக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சசிகலாவுக்கு வாய்க்கு ருசியாக வகை, வகையாக சமைத்து கொடுப்பதற்கு என்றே அந்த பெண்ணை பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தங்க வைத்ததிருந்துள்ளார்.

 மர்மமாக உள்ளது

மர்மமாக உள்ளது

அந்த பெண் எப்போது பெங்களூர் சிறைக்குள் நுழைந்தார். இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியில் அவரால் எப்படி சிறைக்குள் வர முடிந்தது என்று உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறை அதிகாரிகள் அவருக்கென ஒதுக்கி கொடுத்த 5 அறைகளில் ஒரு அறையில் அந்த பெண் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

Special kitchen functioning for V Sasikala inside prison-Oneindia Tamil
 3 சமையல் கலைஞர்கள்

3 சமையல் கலைஞர்கள்

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்காக உணவு வகைகளை தயாரிக்க 3 பெண்கள் இருந்தனர். அவர்கள் ஒருவர்தான் சசிகலாவுடன் சிறையில் தங்கி இருந்து உணவு தயாரித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
To cook delicious meal for Sasikala, a chef from Poes Garden accompanied with Sasikala and stayed there.
Please Wait while comments are loading...