ஜெ. வழக்கு அப்பீல்: கர்நாடகாவின் திருத்தப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு - விரைவில் விசாரணை
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 27ல் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது.

தண்டனையை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரணை முடிவில், நால்வரையும் நிரபராதி என்று மே 11ம் தேதி, நீதிபதி சி.ஆர். குமாரசாமி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் கணித தவறு உள்ளிட்ட பல்வேறு பிழைகள் இருப்பதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்தார். எனவே, அப்பீலுக்கு ஏற்ற வழக்கு இது என்று அரசுக்கு சிபாரிசு செய்தார். கர்நாடக அமைச்சரவையும், இதை ஏற்று, மேல்முறையீட்டுக்கு பச்சைக்கொடி காண்பித்தது.
எனவே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் ஜூன் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்வதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய, 6 பேர் குழுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நியமித்தது. அந்த குழு நடத்திய ஆய்வில், கர்நாடக அரசின் மனுவில் சுமார் 10 குறைபாடுகள் இருந்தது சுட்டிக் காட்டப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் குழுவினர் மேல்முறையீட்டு மனுவை திருத்தும் பணியில் ஈடுபட்டது. பணிகள் முடிந்ததும், கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்குக்கு 11477/2015 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கு எண் வழங்கப்பட்டு விட்டதால் அடுத்த வாரத்திலேயே விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications