பிரஸ்ஸல்ஸில் சிக்கிய பயணிகளை 'ஏர்லிஃப்ட்' பட பாணியில் மீட்கும் ஜெட் ஏர்வேஸ்
டெல்லி: பிரஸ்ஸல்ஸில் சிக்கிய பயணிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேருந்துகள் மூலம் ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் டெல்லி, மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் விமானம் அங்கு தரையிறங்கியது. வெடிகுண்டுகள் வெடித்ததில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இருவர் காயம் அடைந்தனர். பயணிகள் அனைவரும் நல்லவேளையாக உயிர் பிழைத்தனர்.

இந்நிலையில் பிரஸ்ஸல்ஸில் சிக்கிய பயணிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேருந்துகள் மூலம் புதன்கிழமை இரவு ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் சென்று ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளை மும்பை, டெல்லி மற்றும் டொரண்டோவுக்கு அழைத்துச் செல்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூவார்க் செல்லும் பயணிகளுக்கு வேறு ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் வரும் 26ம் தேதி வரை பிரஸ்ஸல்ஸுக்கு மற்றும் பிரஸ்ஸல்ஸில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 27ம் தேதி பிரஸ்ஸல்ஸில் இருந்து மும்பை வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜெட் ஏர்வேஸ் பயணிகள் பயணிக்க பெல்ஜியம் அதிகாரிகளுடன் சேர்ந்து எங்கள் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடனும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. பிரஸ்ஸல்ஸில் இருந்த விமானம் ஆம்ஸ்டர்டாமை அடைந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் ஆம்ஸ்டர்டாமில் இருந்து டெல்லி, மும்பை, டொரண்டோவுக்கு இன்று 3 விமானங்களை இயக்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதி:
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த 3 தீவிரவாதிகள் வந்தனர். அதில் எல் பக்ராவுய் சகோதரர்கள் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டனர். மூன்றாவது நபர்
விமான நிலையத்தில் இருந்து தப்பிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications