பில்லி, சூனியம் வைத்ததாக கூறி வயதான தம்பதி வெட்டிக் கொலை
ராஞ்சி: மாந்த்ரீக செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஜார்க்கண்டில் வயதான கணவன்,மனைவியை வெட்டி கொலை செய்துள்ளனர்.
மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போன ஜார்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து வயதான தம்பதியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குந்தி மாவட்டத்தின் குட்லம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வா ஹரென். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் தனது மனைவி பசந்தி என்பவருடன் பில்லி, சூனியம் போன்ற சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர்.
இந்நிலையில், குந்தி மாவட்டத்தில் உள்ள பிகாடன் ரெயில்வே கேட் அருகில் வெட்டுக் காயங்களுடன் 2 பிரேதங்கள் கிடப்பதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் ஜஸ்வா ஹரென் மற்றும் பசந்தியின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களின் உடல் முழுவதும் ஏகப்பட்ட வெட்டுக் காயங்கள் காணப்பட்டதால் சூனியம் வைத்ததாக சந்தேகித்து கிராம மக்கள் இவர்களை கொன்றிருக்கக் கூடும் என போலீசார் கருதுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications