ஜார்க்கண்ட் தேர்தல் எக்ஸிட் போல்: ஆட்சியை அமைக்கும் பாஜக! ஜேஎம்எம்- காங். கூட்டணி படுதோல்வி
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையே ஏபிபி- Matrize இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக கூட்டணியே அங்கு ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நவ. 13ம் தேதி 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று 38 தொகுதிகளில் இரண்டு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. வரும் சனிக்கிழமை நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்: வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இப்போது ஏபிபி மற்றும் Matrize ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 81 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்தது 42 இடங்களில் வெல்ல வேண்டும்.
அதன்படி ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சீட்களில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 42- 47 இடங்களில் வெல்லும் என்று ஏபிபி- Matrize கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி 25-30 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் கட்சிகள் அங்கு 1- 4 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதாவது அங்கு இப்போது ஆட்சியில் உள்ள ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி Matrize எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதற்கு முன்பு கடந்த 2019ல் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அப்போது எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி மட்டும் 30 சீட்களில் வென்று இருந்தது. காங்கிரஸ் 16 சீட்களில் வென்ற நிலையில், இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் பாஜகவால் அங்கு 25 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது தவிர ஜேவிஎம்பி கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு என்ற கட்சி 2 இடங்களிலும் வென்று இருந்தது.
கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 14 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜக 9 இடங்களிலும் இந்தியா கூட்டணி 5 இடங்களிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications