ஜே.என்.யூ மாணவர் கன்யாகுமார் மீது தாக்குதல்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை கமிஷன் குட்டு
டெல்லி: ஜவகர்லார் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் மீது டெல்லி கோர்ட்டில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அதை டெல்லி போலீசார் தடுக்க தவறி விட்டனர் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் அப்சல் குரு நினைவு தின நிகழ்ச்சி தொடர்பாக தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் இரு தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டார். அப்போது வக்கீல்கள் சிலர் கன்னையா குமார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தில் கன்யா குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க போலீசார் தவறிவிட்டனர். காவல் நிலையத்தில் வைத்து கன்யா குமாருக்கு மனரீதியான உளைச்சலை உருவாக்கி அவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது முன்கூட்டியே திட்டமிட்டும், ஒருங்கிணைக்கப்பட்டும் நடத்தப்பட்டுள்ளது. கன்யா குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் தவறிவிட்டனர். காவல் நிலையத்தில் கன்யா குமார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள வாக்குமூலமானது போலீசாரால் மிரட்டி எழுதி வாங்கப்பட்டதாகும்.
எனவே அவருக்கு காவல்நிலையத்திலும், திகார் சிறையிலும் உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீதிமன்ற சம்பவத்தில் போலீசார் அலட்சியமாக நடந்துள்ளனர் என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications