டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம்!
டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது மே 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது நாளை மறு நாள் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரனை ஜாமீனில் விடுவிக்க கூடாது என டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது டிடிவி தினகரனை ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்று டெல்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிடிவி தினகரனை வெளியில் விட்டால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நிதமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக டிடிவி தினகரனின் காவலை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications