சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு செக்?பாஜக வென்றால் மத்திய பிரதேசத்தில் முதல்வராகும் ஜோதிர்ஆதித்ய சிந்தியா?
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக வென்றால் அங்கு முதல்வர் பதவி மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருவது தற்போதைய முதல் அமைச்சர் சிவ்ராஜ் சவுகானை கலக்கமடைய வைத்துள்ளது. இதற்கிடையே தான் ஜோதிர்ஆதித்ய சிந்தியா முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் 17 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. சிவ்ராஜ் சிவ்கான் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க சிவ்ராஜ் சிவ்கான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போது தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இருகட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் மாநிலமாக மத்திய பிரதேசம் தான் உள்ளது. பல கருத்து கணிப்புகளில் இருக்கட்சியில் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் கூட மயிரிழை வித்தியாசம் தான் இருக்கும் என தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தான் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி வழங்கப்படாது என கூறப்படுகிறது. மாறாக வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் சிவ்ராஜ் சிங் சவுகான் தரப்பு அப்செட்டாகி உள்ளது. இருப்பினும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தரப்பு செயல்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைத்தால் மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. கடந்த 2018 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிர்ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்ற நிலையில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக அரியணை ஏறியது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் அங்கு முதல்வராக பொறுப்பேற்றார். ஜோதிர்ஆதித்ய சிந்தியா மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் பரவுகிறது. இதுபற்றி பத்திரிகையாளர்கள் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‛‛சிந்தியாவின் குடும்பம் முதல்வர் பதவிக்கான ரேஸில் இல்லை. நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் இரவு பகலாக வளர்ச்சி பணி, மக்கள் பணிக்காக செயல்பட்டு வருகிறோம்.
மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகளாக சிவ்ராஜ் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த காலத்தில் நோய்வாய்பட்ட மாநிலம் என்ற பெயரில் இருந்து வெளியே வந்துள்ளது. நான் மத்திய பிரதேச மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் இல்லை'' என்றார். இதன்மூலம் அவர் தான் முதல்வர் பதவிக்கான ரேஸில் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலை பொறுத்தமட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒருவேளை மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக வென்றால் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிய நாம் அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications