பெரும் தலைவலி தந்த 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு... திமுக ஒரே குஷி!
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து திமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Recommended Video

டெல்லி: நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஆர்.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரை விடுவிக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி சந்தோலியா மற்றும் பெகுரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, ஷாகீத் பால்வா உள்ளிட்டோர் மீதும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜாத்தியம்மாள், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தனர். இந்த வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வருகை தந்தார்.
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் கீழ் இந்த வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பை வாசித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து திமுகவினர் தமிழகத்திலும், டெல்லி நீதிமன்றம் முன்பும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கட்சியினர் மீது போடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது தற்போது நிரூபணமாகிவிட்டதாக தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications