கர்நாடகாவிற்காக சபதத்தை கலைத்த கபில் சிபல்.. மீண்டும் நீதிமன்றம் வந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ

  டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று கூறி இருந்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று கர்நாடக அரசியல் பிரச்சனைக்காக காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.

  கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

  Kapil Sibal appeared in SC for Karnataka amidst his promise against CJI

  இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

  இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் காங்கிரஸ் தரப்பில் கபில் சிபில் ஆஜராகி இருந்தார். பாஜக தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி இருந்தார்.

  இன்று கபில் சிபல் ஆஜாராவார் என்று கூறப்பட்டது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று வழக்கறிஞர் கபில் சிபல் சபதம் எடுத்து இருந்தார். ஆனால் இன்று அதை மீறி அவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளின் எம்பிக்கள் ராஜ்ய சபாவில், வெங்கையா நாயுடுவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இன்று காலை இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

  இதையடுத்து கபில் சிபல் ''இனி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன். அவர் எத்தனை நாள் பதவியில் இருக்கிறாரோ அது வரை உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன். என்னுடைய வேலைக்கு நான் செலுத்தும் மரியாதை அதுதான்'' என்று கூறி இருந்தார்.

  தற்போது கர்நாடகாவிற்காக அவர் மீண்டும் நீதிமன்ற படியை மிதித்துள்ளார். இன்று அவர் வைத்த முக்கியமான வாதங்கள்தான் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மிக முக்கியமான காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kapil Sibal once said that, He won't appear in Supreme court till CJI Deepak Misra retires. He also added that not attending Misra's court is the basic standard for his job. But for Karnataka problem, He has appeared in court today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற