கர்நாடகா தேர்தல் முடிவு: தபால் ஓட்டு நிலவரம்.. காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான தபால் ஓட்டு அடிப்படையில் ஆளும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தவிர 222 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அதிரடியாக முன்னிலை

அதிரடியாக முன்னிலை

முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் காங்கிரஸ் அதிரடியாக முன்னிலை வகித்தது.

விரட்டி வந்த பாஜக

விரட்டி வந்த பாஜக

இதைத்தொடர்ந்து விரட்டி வந்த பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியை கொடுத்தது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் , பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

காங்கிரஸ்க்கு பின்னடைவு

காங்கிரஸ்க்கு பின்னடைவு

இந்நிலையில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் 80 இடங்கள்

காங்கிரஸ் 80 இடங்கள்

சற்றுமுன் நிலவரப்படி பாஜக 90க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 80 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மஜத ஆசி பெறும் கட்சி ஆட்சி

மஜத ஆசி பெறும் கட்சி ஆட்சி

மதசார்பற்ற ஜனதாதளம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கர்நாடகாவை பொறுத்தவரை மதசார்பாற்ற ஜனதா தளம் ஆதரவு தரும் கட்சியே ஆட்சியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka assembly election: Heavy competition between BJP and Congress in the postal ballet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற