ரிசல்ட்டுக்கு முன்பே பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்த எடியூரப்பா.. ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் எடியூரப்பா முன்னிலையில் உள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மொத்தம் 38 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 84000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்

லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்

2019 லோக் சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுவதால் நாடே கர்நாடக தேர்தல் முடிவுகளை உற்று நோக்கி வருகிறது. பாஜக ஆட்சியை பிடிக்குமா அல்லது காங்கிரஸின் கை ஓங்குமான என்று அந்தந்த கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள் அடிப்படையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பெங்களுருவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

சித்தராமையாவுக்கு பின்னடைவு

சித்தராமையாவுக்கு பின்னடைவு

வட கர்நாடகாவில் பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தாரமையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பா முன்னிலை

எடியூரப்பா முன்னிலை

அதேநேரத்தில் ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகித்து வருகிறார். தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka assembly election result: Yeddyurappa is leading in Shikaripura. Many constituecy of Bengaluru BJP is leading. In North Karnataka Congress is leading.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற