டிஐஜி ரூபா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு... நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் தர்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலாவுக்கு சுகபோக சொகுசு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு என பார்வையாளர் அறை, யோகா அறை, டிவி பார்க்கும் அறை என 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Karnataka BJP MPs protest at Parliament House against the transfer of DIG Roopa

இதனை கண்டுபிடித்த கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, இந்த வசதிகளை செய்து கொடுக்க சசிகலாவிடம் இருந்து டிஜிபி சத்திய நாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் கூறினார். இந்த விவகாரம் கர்நாடக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவ்ர நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக மாநில பாஜக எம்பிக்கள் ரூபாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பதாகைகளுடன் எம்பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேர்மையான அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் சிறைவளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sasikala’s VIP Treatment, DIG Roopa Transferred-Oneindia Tamil

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka BJP MPs have been engaged in protest at Parliament House against the transfer of DIG Roopa. This has led to a stir in the parliamentary premises.
Please Wait while comments are loading...