கர்நாடக பட்ஜெட்டில் சரமாரி வரி.. பெட்ரோல், டீசல், மதுபானம் விலை உயருகிறது
பெங்களூர்: கர்நாடக மாநில 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். கூடுதல் வரி விதிப்பு காரணமாக, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்தின் விலை உயர உள்ளது.
முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் சில பின்வருமாறு:

பெட்ரோல் மீதான வரி விதிப்பு தற்போதைய 26 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால், லிட்டருக்கு ரூ.1.89 வரை விலையேறும்.
டீசல் மீதான வரி 16.65 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அதன் விலை லிட்டருக்கு 89 பைசா அதிகரிக்கும்.

பீர் மீதான கலால் வரி ரூ.5லிருந்து ரூ.10க்கு உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மதுபானங்கள் மீதான கலால் வரி ரூ.45லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பீர் மீதான கூடுதல் கலால் வரி 135 சதவீதத்தில் இருந்து 150 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட ஆல்கஹால் கலப்பில்லாத கார்பனேட்டட் பானங்கள் மீதான வாட் வரி தற்போதைய 14.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
போக்குவரத்து வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது. வாடகை வாகனங்களுக்கு ஒரு இருக்கைக்கு தற்போதுள்ள ரூ.600லிருந்து ரூ.900மாக உயர்த்தப்படுகிறது.
ஆம்னி பஸ்கள் மீதான வாகன வரி ரூ.750 உயர்த்தப்படுகிறது. எனவே ஆம்னி பஸ்களுக்கு இதுவரை ரூ.2750 ஆக விதிக்கப்பட்டு இருந்த வரி இனிமேல் ரூ.3500 ஆக உயர்கிறது.












Click it and Unblock the Notifications