கர்நாடகா- வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.. மாநிலம் முழுவதும் காவல்துறை குவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013-ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட அதிகம் ஆகும்.

Karnataka election result: Heavy Police protection in the state

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில், 283 அரங்குகளில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 84000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka election result: Heavy Police protection in the state. 84000 police deployed across the state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற