For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து விட்டு ஆட்டோவில் போன அமைச்சர்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களை தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் யு.டி. காதர். அவர் நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயதான தம்பதியர் விபத்தில் சிக்கி பரிதவித்ததைப் பார்த்தார். உடனே அவர்களை தன்னுடைய காரின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ மூலம் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார்.

Karnataka minister UT Haider gives his car for accident victims, takes auto

" அமைச்சர் தன்னுடைய தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார். ரம்ஜான் நேரம் என்பதால் அவர் நோன்பிலும் இருந்தார். அப்போதுதான் மெக்ரி சர்க்கிள் அருகில், ஆட்டோ ரிக்‌ஷாவில் விபத்துக்குள்ளான தம்தியினரைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னுடைய கார் ஓட்டுநரின் மூலமாக கே.ஜி. மருத்துவமனை மல்லேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு காதர் அங்கிருந்து ஆட்டோ மூலமாக மசூதிக்கு சென்றுள்ளார். மேலும், தன்னுடைய நோன்பையும் தாமதமாக முடித்துள்ளார்.

English summary
Karnataka Health Minister U.T. Khader Sunday came to the aid of an old couple, involved in an accident, sending them to a hospital in his official car and himself taking an auto to reach his destination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X