கம்பாளா-எருது பூட்டி ரேஸ் ஓட்டுவோம் வாங்க.. தமிழகத்தை தொடர்ந்து போராட்டத்தில் குதிக்கும் கர்நாடகா!
கம்பாளா போட்டிகளுக்கு தடையை நீக்க வலியுறுத்து வரும் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த கர்நாடக மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
மங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டிகளுக்கு தடையை நீக்க வலியுறுத்து வரும் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரேக்ளா பந்தையங்கள், ஜல்லிக்கட்டு என கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெறும். இதற்காகவே காளைகள் சொந்த பிள்ளைகள் போல வளர்க்கப்படும். உச்சநீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டுகள் இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

தமிழர்களின் அறவழிப் போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, குவைத், சவுதி, சிங்கப்பூர் என பல நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டு என்ற ஒன்றை வார்த்தைக்காக குரல் கொடுத்தனர்.
இதேபோல் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய எருது விளையாட்டு கம்பாளா. இந்த எருது பந்தையமானது கரையோர கர்நாடாக மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம தலைவர்களின் வயல்களில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும்.
இந்த கம்பாளா போட்டி நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைப்பெறுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு நவம்பர் 2016ல் இந்த தொடங்க இருந்த இந்த போட்டிக்கு கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த பாரம்பரிய விளையாட்டிற்கும் பீட்டா அமைப்புதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்கள் ஒன்று கூடி அறவழியில் போராடி பாரம்பரிய உரிமையை மீட்டு எடுத்து போல், கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்திவரும் "கம்பாளா" போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, வரும் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications