தமிழக அரசை கண்டித்து கர்நாடக இளைஞர் காங். தர்ணா! ஜெ., ஓபிஎஸ் உருவ பொம்மைகள் எரிப்பு
பெங்களூரு: மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறையேற்றிய தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை கண்டித்து கர்நாடக இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் இன்று காலை கூடிய கர்நாடக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வர் பன்னீர் செல்வம் உருவபடத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். "காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதை தமிழக அரசு விட வேண்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தாங்கி பிடித்திருந்தனர்.
இதன்பிறகு, பன்னீர்செல்வம் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதனிடையே கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும், ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் உருவ பொம்மையுடன் ஊர்வலம் வந்து அனந்தராவ் சர்க்கிளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
'போராடினால் வெற்றி நமக்கு.. சும்மா இருந்தால், தோல்வி நிச்சயம்' என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதன்பிறகு உருவ பொம்மைகளுக்கு தீயிட்டனர். போலீசார் தலையிட்டு தீயை அணைத்து, போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications