For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனி நாடு கேட்கப் போகிறாரா 'தெலுங்கானா' கேசிஆர்.. மகள் பேச்சால் புது சர்ச்சை!

Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா எம்.பியுமான கவிதாவின் சமீபத்திய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கண்டனங்களையும் வாரிக் கொண்டுள்ளது.

காஷ்மீரும், தெலுங்கானாவும் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்ததில்லை. இவற்றை இந்திய அரசுதான் அத்துமீறி ஆக்கிரமித்துக் கொண்டு இந்தியாவுடன் சேர்த்து விட்டதாகவும் கவிதா கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பியான அவர் ஒரு செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படிக் கூறியுள்ளார். அவரது பேட்டியிலிருந்து....

ஜம்மு காஷ்மீர் - தெலுங்கானா

ஜம்மு காஷ்மீர் - தெலுங்கானா

ஜம்மு காஷ்மீரும் சரி, தெலுங்கானாவும் சரி இரண்டுமே இந்தியாவுடன் ஒருபோதும் இருந்ததில்லை. அவை இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை. இதை நாம் முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்.

எல்லைகளை மாற்றுங்கள்

எல்லைகளை மாற்றுங்கள்

எனவே நாம் இதை மனதில் கொண்டு இந்தியாவின் எல்லையை மாற்றியமைக்க வேண்டும். இதுதான் எதார்த்தமானது, சரியானதும் கூட என்றார் கவிதா.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

கவிதாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் பேச்சு இது என்று அது வர்ணித்துள்ளது.

ஒருங்கிணைந்த பகுதிகள்

ஒருங்கிணைந்த பகுதிகள்

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தது. காஷ்மீர் மக்களும் இதை உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு மாநில முதல்வரின் மகள் காஷ்மீர் குறித்து இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சி தருகிறது என்றார் சிங்வி.

தனி நாடு கேட்கத் திட்டமா

தனி நாடு கேட்கத் திட்டமா

தெலுங்கானா தனி மாநிலத்தை கடுமையாகப் போராடி, அடம் பிடித்து, சாதித்து வாங்கியவர் சந்திரசேகர ராவ். இப்போது அவரது மகள் பேசுவதைப் பார்த்தால் ஒரு வேளை தனி நாடு கோரிக்கையை டிஆர்எஸ் கையில் எடுக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

தெலுங்கு மக்களைப் பிரித்தவர் என்ற புகார்

தெலுங்கு மக்களைப் பிரித்தவர் என்ற புகார்

ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்களை தெலுங்கானா, சீமாந்திரா என்று பிரித்தவர் ராவ் என்ற குற்றச்சாட்டு தெலுங்கு மக்களிடையே உள்ளது. இந்த நிலையில் கவிதாவின் பேச்சை தெலுங்கு மக்கள் மீது நாட்டு மக்களின் கோபம் திரும்பக் காரணமாக அமையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

English summary
Indian lawmaker K Kavitha, who is member of Lok Sabha, the lower house of the Indian parliament, has categorically stated that Jammu Kashmir and Telangana are not parts of India and New Delhi has forcibly occupied these territories. Kavitha, who represents Telangana Rashtra Samithi (TRS) party in the parliament, during a newspaper said that Telangana and Kashmir were both separate territories but were forcefully merged into India after independence. "We need to come out clean on Jammu Kashmir. Few parts were not ours, we should agree, we should redraw the international lines, and move on," she added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X