For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோலை ரெடியா வைங்க.. உத்தரவு வந்ததும் ஊற்றி எரிக்கனும்.. வைரலாகும் காங். பிரமுகர் பேச்சு

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: பெட்ரோலையும், டீசலையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.. உத்தரவு வந்ததும் ஊற்றி எரித்துவிடலாம் என காங்கிரஸ் பிரமுகர் கூறிய கருத்து நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின், நாபரங்க்பூர் மாவட்டத்தில், பழங்குடியின சிறுமி ஒருவர் கடந்த 14ஆம் தேதி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பிரச்சினை தொடர்பாக, மாவட்டம் முழுக்க 12 மணிநேர கடையடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் பிரமுகர் பிரதீப் மாஜி, தொலைபேசியில் இன்னொருவருடன் பேசக்கூடிய ஒரு ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் பெட்ரோல் மற்றும் டீசலை ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள்.., உங்களுக்கு அறிவுறுத்தல் வந்ததும் அனைத்தையும் தெரிவியுங்கள். அடுத்து என்னதான் நடந்துவிடும் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வருத்தம் இல்லை

வருத்தம் இல்லை

இந்த ஆடியோ வைரலாக சுற்றிவரும் போதிலும், இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்று பிரதீப் மாஜி தெரிவித்துள்ளார். நாங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கையை பின்பற்றுகிறோம், பலாத்காரம் மற்றும் கொலைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும்போது நாங்கள் பதிலுக்கு என்னதான் செய்ய முடியும் என்று கேட்கிறார் அவர்.

வாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்!வாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்!

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

மேலும், அவர் கூறுகையில், நாங்கள் வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருக்க முடியாது. ஏற்கனவே ஒரு சிறுமி ராணுவ வீரர்களால், பலாத்காரம் செய்யப்பட்டார். தற்போது நபரங்கப்பூர் பகுதியில் மற்றொரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்துள்ளார்.

 என்ன நடக்கும்

என்ன நடக்கும்

13 நாட்கள் ஆனபிறகும் கூட இன்னமும் அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாரால் வாங்க முடியவில்லை. மருத்துவர்களும், உள்துறை அமைச்சகம், உத்தரபிரதேச மாநில அரசும் என்ன செய்து கொண்டு இருக்கிறது.
இது போன்ற ஏழை சிறுமிகளுக்கு நியாயம் பெற்றுத் தருவதற்கு காந்தியக் கொள்கை பலன் தரவில்லை. எனவேதான் நாங்கள் சுபாஷ் சந்திரபோஸ் வழிமுறையை கையில் எடுத்துள்ளோம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

நாங்கள் வன்முறையை கையில் எடுத்தால் தான் எங்கள் தாய்களையும், எங்கள் சகோதரிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், இதிலிருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். பிரதீப் மாஜியும், பழங்குடியின காங்கிரஸ் பிரமுகர் மற்றும் முன்னாள் எம்.பி. என்பது குறிபிடத்தக்கது.

எப்.ஐ.ஆர் பதிவு

எப்.ஐ.ஆர் பதிவு

பிரதீப் மாஜியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது காவல்துறை, வழக்கு பதிவு செய்துள்ளது. கலவரத்தை தூண்டுதல், கிரிமினல் சதி திட்டம் போன்ற பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது.

English summary
Senior Congress leader and former MP Pradip Majhi on Thursday courted controversy as he was caught on camera directing party workers to "set afire everything immediately after getting directions" during the 12-hour strike called by the party in Nabarangpur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X