ஜெப கூட்டத்திற்கு சென்ற டொமினிக் மார்ட்டினின் மாமியார்! கேரள குண்டுவெடிப்பில் உயிர் தப்பியது எப்படி?
கொச்சி: கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
கொச்சியில் களமச்சேரியில் உள்ள கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) காலை 9 மணிக்கு இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடிவிபத்துகள் நடந்தன.

இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் நான்தான் என கொடக்கராக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மார்ட்டின் ரிமோட் செயலி முறையில் எல்இடி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளது உறுதியானது.
சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டொமினிக், கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பை தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன். இந்த குண்டுவெடிப்பில் நான் மட்டுமே செய்தேன், வேறு யாரும் உதவவில்லை.
அது போல் வெடிகுண்டு தயாரிக்க வெடிப்பொருள்களை கொச்சியிலிருந்து வாங்கினேன என கூறியிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் ஒருவர் பலியாகிவிட்டார். இவர் தொடுபுழாவை சேர்ந்த குமாரி ஆவார். இவருக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது போல் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட மார்ட்டினிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அவர் தனது பூர்வீக வீட்டில் வைத்து வெடிகுண்டை தயாரித்ததாக தெரிவித்திருந்தார். அதன்படி ஆலுவா பகுதியில் அத்தாணியில் உள்ள மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் நேற்று (அக்டோபர் 30)அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் கொலையாளியிடம் என்ஐஏ அதிகாரிகள் 29 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடி பொருட்களை வாங்கி தயாரித்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மார்ட்டின் தெரிவித்துள்ளார். தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்த காட்சிகளையும் காண்பித்துள்ளார்.
விசாரணையின் போது அவர் தெரிவித்த தகவல்களை வைத்து டொமினிக்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினார் என்பதை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்தனர். வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார். மேலும் யூடியூபை பார்த்து சிம்பிள் சர்க்கியூட் மூலம் வெடிகுண்டை வெடிக்க வைக்க ரிமோட்டையும் தயார் செய்துள்ளார்.
அந்த ரிமோட்டை பயன்படுத்தியே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். ரிமோட்டை பயன்படுத்தி குண்டுவெடிப்பை வெடிக்கச் செய்த வீடியோவையும் தனது செல்போனில் வைத்திருந்தார் மார்ட்டின். குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருந்தார். அவர் பங்கேற்கும் தகவல் அறிந்த டொமினிக் மார்ட்டின் அவரை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர் டொமினிக் மார்ட்டின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் டொமினிக்கின் மாமியார் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அவர் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications