5 வருஷமா பாலியல் பலாத்காரம்… சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய மாணவிக்கு சபாஷ்.. கேரள முதல்வர் நெத்தியடி
தன்னிடம் அத்துமீறிய சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மாணவிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: தன்னிடம் அத்துமீறிய சாமியார் ஒருவரின் ஆணுறுப்பை வெட்டிய சட்டக் கல்லூரி மாணவியின் துணிச்சலை கேரள முதல்வர் பினராய் விஜயன் பாராட்டியுள்ளார்.
கேரளாவில் 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் பிறப்புறுப்பை, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துண்டித்தார். இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாது இந்தியாவையே பரபரப்பாக்கியது.
தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது மாணவி ஆணுறுப்பை வெட்டியதால், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாமியார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீஸார் விசாரித்து, ஸ்ரீஹரி சுவாமி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் பிறப்புறுப்பை அறுத்தேன் என பாதிக்கப்பட்ட பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

வேறுவிதமாக சாமியார்
ஆனால், தனக்கு உதவாத ஒன்று தனக்கு தேவையில்லை என்று தானே தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டதாக சாமியார் வேறு மாதிரி கூறியுள்ளார். இவர் தரும் விளக்கத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை.

சபாஷ்
இந்நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன், பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த பெண்ணுக்கு சபாஷ் கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டிய அவர், சட்டக் கல்லூரி மாணவியின் முடிவு மிகவும் தீரமானது என்று புகழ்ந்துள்ளார்.

எச்சரிக்கை
மேலும், மாணவியின் செயல், பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கைப் பாடமாக இருக்கும். இனி பெண்கள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இதுபோன்ற துணிச்சலான செயலில் ஈடுபட வேண்டும் என்று கேரள முதல்வர் பெண்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications