For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா வெள்ளம்: ரூ.21 கோடி பணம்.. ரூ.50 கோடிக்கு பொருள்.. நிவாரண நிதி வழங்கிய நீத்தா அம்பானி !

கேரளா வெள்ளத்திற்கு நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா வெள்ளத்திற்கு நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார்-வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார்.

    கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.

    Kerala flood: Nita Ambani gave Rs.71 crore relief fund to CM Pinarayi

    இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது. அங்கு இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

    இந்த நிலையில் கேரளா வெள்ளத்திற்கு ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார் நீத்தா அம்பானி. ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீத்தா முகேஷ் அம்பானி அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கினார்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இன்று வழங்கினார். இதில் 21 கோடி பணமாக வழங்கினார். மீதம் உள்ள, 50 கோடிக்கு பொருட்கள் வாங்கி அளித்துள்ளார். கேரளா முதல்வர் பினராயி அவருக்கு இதனால் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

    அதேபோல் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மக்கள் கொடுத்த பணம் மட்டுமே இதுவரை ரூ.1,027 கோடி வந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதை வைத்து முதற்கட்ட புனரமைப்பு பணிகளை செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Kerala flood: Nita Ambani gave Rs.71 crore relief fund to CM Pinarayi .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X