Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சே பதறுதே.. பாத்ரூமுக்குள் பதுங்கியிருந்த எமன்! ஸ்ரேயாவுக்கு பிறந்த நாளே இறந்த நாளான சோகம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சமீபகாலமாக இளைஞர்கள் திடீர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் 18 வயது மாணவி ஒருவர் குளியல் அறைக்குச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாளன்று மாணவி இறந்தது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பெருந் தொற்று விலகி விட்ட நிலையில் தடுப்பூசிகளால் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் திடீர் திடீரென மரணம் அடைந்து வருகிறார்கள். சாலையில் நடந்து செல்லும் போதும், வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதும் திடீரென இதயத்தின் செயல்பாடு நின்று மயங்கி விழுந்து உயிர் இழப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்று வருவது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட போல்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்.

Kerala Birthday health

இவரது மனைவி பிந்து இவர்களுக்கு ஸ்ரேயா என்ற மகள் இருக்கிறார். 18 வயதாகும் ஸ்ரேயா பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரி திறக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வந்தார் ஸ்ரேயா. தோழிகளை சந்திப்பதற்கு முன் தனது வீட்டின் குளியலறைக்கு குளிக்க சென்றுள்ளார்.

வீட்டுக்குள் அவரது தாய் பிந்து தனது மகளுக்கு ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து வாங்கிய ஆடைகளை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்ரேயாவின் அலறல் சத்தம் கேட்டது. அதிர்ந்து போன பிந்துவும் அவரது கணவரும் குளியலறைக்குச் சென்று போய் பார்த்தபோது ஸ்ரேயா மயங்கிய நிலையில் கீழே கிடந்தார். இதை அடுத்து பதறிப் போன பெற்றோர் அருகில் இருந்தோர் உதவியுடன் ஸ்ரேயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஸ்ரேயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்திருக்கலாம் என கூறி அதிர வைத்தனர். பிறந்தநாள் அன்று மகள் இறந்து போன செய்தி கேட்டு அவரது தந்தை ராஜனும் தாய் பிந்துவும் மருத்துவமனையில் கதறி துடித்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது. தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்கு ஸ்ரேயாவின் உடல் அனுப்பப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட இதய கோளாறு காரணமாக அவர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. பிறந்த நாளன்று மாணவி இறந்து போன சம்பவம் கேரளாவில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் திடீரென இதய செயல்பாடு நிற்பதற்கான காரணிகள் தெளிவாகத் தெரியவில்லை. வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால் 18 வயதான மாணவிக்கு ஏன் இது போன்று நடந்தது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் முழுமையான காரணம் தெரிய வரும். அதே நேரத்தில் சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+