பலாத்கார விவகாரம்: மிருகங்களை போல் நடந்துள்ளார்கள்.. கேரள பாதிரியார்களை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் பாவமன்னிப்பு கோரிய பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாதிரியார்களை அம்மாநில உயர்நீதிமன்றம் வெளுத்து வாங்கியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும் டெல்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் திருமணத்திற்கு முன்பு எனது மனைவி பாதிரியார் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மிரட்டி பலாத்காரம்
அதற்காக பாவ மன்னிப்பு கேட்க சென்ற எனது மனைவியை பாவமன்னிப்பு வழங்கிய பாதிரியார் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அவர் மேலும் 3 பாதிரியார்களிடமும் கூறியுள்ளார்.

பலமுறை பலாத்காரம்
எனது மனைவி கேட்ட, பாவ மன்னிப்பை வைத்து மிரட்டி அவரை 4 பாதிரியார்கள் உட்பட 8 பேர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

வெளியான ஆடியோ
இதனிடையே சர்ச் நிர்வாகி ஒருவரும் அந்தப் பெண்ணின் கணவரும், பேசிய ஆடியோ வெளியானது. அதில், பெண்ணின் கணவர் கூறியிருந்ததாவது: என் மனைவியை, திருமணத்துக்கு முன்பே, பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக, சர்ச்சில், மற்றொரு பாதிரியாரிடம், பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்.

வைரலான ஆடியோ
ஆனால், அந்த பாதிரியார் இந்த விவகாரத்தை வெளியில் சொல்வேன் என மிரட்டி என் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மூன்று பாதிரியார்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார், அவர்களும், என் மனைவியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வைரலானது.

சர்ச் நிர்வாகம் உத்தரவு
கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, பாதிரியார்கள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, விடுமுறையில் செல்லும்படி, அந்த பாதிரியார்களுக்கு சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது.

போலீசார் வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக தலையிட்டதை முன்னிட்டு இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க அம்மாநில காவல்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 4 பாதிரியார்கள் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொய் புகார்
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய 3 பேரும் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் அரசியல் நெருக்கடியால் தங்கள் மீது பொய்யாக பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

மிருகத்தனமாக நடந்துள்ளனர்
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த புகார் மிகவும் முக்கிமானது என்றும் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். எனவே முன்ஜாமீன் வழங்க முடியாது என்றார். மேலும் பாதிரியார்கள் பெண்ணிடம் மிருகத்தனமாக நடந்துள்ளனர் என்றும் நீதிபதி சாடினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!