கேரளா உள்ளாட்சித் தேர்தல்... வரிந்து கட்டும் காங்.- இடதுசாரிகள்... கால் பதிக்க துடிக்கும் பா.ஜ.க.
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சித் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். மற்றும் இடதுசாரிகளின் எல்.டி.எப். இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதுவும் இத்தேர்தலில் 3வது அணியாக பா.ஜ.க.வும் களமிறங்கி எப்படியும் கேரளாவில் கால்பதித்துவிட துடிக்கிறது.
கேரளாவில் வரும் நவம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி முன்னணிகளுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் 'அரை பரீட்சை' போல முக்கியத்துவமான ஒன்றாகும்.

இத்தேர்தலில் ஈழவா சமூகத்தின் ஸ்ரீ நாரயண தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பின் உதவியுடன் கேரளாவில் கால்பதிக்க பா.ஜ.கவும் முயற்சிக்கிறது. இது இடதுசாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஈழவா சமூகமே அவர்களது பெரும்பான்மையான வாக்கு வங்கி. தற்போது பா.ஜ.க.- எஸ்.என்.டி.பி. கூட்டணியானது இந்த வாக்கு வங்கியை வேட்டையாட காத்திருக்கிறது.
இதனால் ஈழவா சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்து வௌர்கிறது. மேலும் ஆளும் காங்கிரஸ் அரசுதான் விலைவாசி உயர்வுக்கும் காரணம் எனவும் இடதுசாரிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
அத்துடன் கேரளாவில் காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் ரகசிய உறவு வைத்துள்ளதாகவும் இடதுசாரிகள் அதிரடி குண்டுவீசி வருகின்றனர். இந்த நிலையில் நிதி அமைச்சர் மானி மீதான லஞ்ச ஒழிப்பு புகார் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இடதுசாரிகளுக்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் ஆளும் காங்கிரஸ்- இடதுசாரிகளிடையே கடுமையான போட்டியே நிலவுகிறது.
சமூக வலைதளம் மூலம்..
இதனிடையே கண்ணூர் மாவட்டம் தலசேரியில் 2006ஆம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகி முகமது பைசல் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கராயி சகோதரர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதித்த நீதிமன்றம் மாவட்டத்துக்குள் செல்ல தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரு சகோதரர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பிரசாரங்களை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் புதிய திருப்பமாக முகமது பைசலை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என அவரது குடும்பத்தினரும் இந்த சகோதரர்களுடன் கை கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications